தமிழ்நாடு

பிரபஞ்சனின் உடலுக்கு முதல்வர் நாராயணசாமி அஞ்சலி

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அரசு சார்பில் தேசிய கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.

தந்தி டிவி
மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அரசு சார்பில் தேசிய கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார். புற்றுநோய் காரணமாக கடந்த 21ஆம் தேதி உயிரிழந்த சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் புதுச்சேரி, பாரதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெறும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் பிரபஞ்சனின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனனும் பிரபஞ்சனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரபஞ்சனின் இறுதிச்சடங்கு இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் புதுச்சேரி சன்னியாசி தோப்பில் உள்ள இடுகாட்டில் நடைபெறுகிறது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி