தமிழ்நாடு

PR Pandian Case | பி.ஆர்.பாண்டியனுக்கு ஐகோர்ட் போட்ட புதிய உத்தரவு

தந்தி டிவி

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு, காவிரி டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், கரியமங்கலத்தில் நடந்த இந்த போராட்டத்தில், ஓ.என்.ஜி.சி. நிறுவன சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாக, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த திருவாரூர் அமர்வு நீதிமன்றம், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட இருவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்