தமிழ்நாடு

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்... கூலி உயர்வு கோரி போராட்டம்

விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்... கூலி உயர்வு கோரி போராட்டம்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் செயல்படவில்லை. மேலும், தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்