Chennai | Protest | "புது வண்ணாரப்பேட்டையில் 24 மணி நேரமாக மின்தடை" | சாலையில் குதித்த மக்கள்
#chennai #protest #currentcut #thanthitv
புது வண்ணாரப்பேட்டையில் 24 மணி நேரமாக மின்தடை - மக்கள் சாலை மறியல் சென்னை புது வண்ணாரப்பேட்டையில், 24 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பொன்னுசாமி தெரு, செரியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை மின்சாரம் வழங்கப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் வள்ளலார் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மின்தடையால் கொசுத்தொல்லை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும், புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.