தமிழ்நாடு

பொன்பரப்பி கலவரத்தை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பி கலவரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தந்தி டிவி

பொன்பரப்பி கலவரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்தினால் மட்டுமே தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படுகிறது என்பது உண்மையாகும் என்றார். ஆட்சிகளும், காட்சிகளும் மாறும் என்பதால், அதிகாரிகள் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்று, திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்