காவல்துறை முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். கையெழுத்திட்ட பிறகு வெளியே வந்த அவர், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழக கோவில் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது குறித்து இதுவரை 45 வழக்குகள் பதியப்படாமல் இருப்பதாக கூறினார். வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளை மீண்டும் கொண்டு வரவிடாமல் ஒரு கும்பல் தடுக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.