சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து சிலை கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் உள்ளிட்டவைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுவுக்கு தமிழக உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக டிஜிபி ஒப்புதலுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.