தமிழ்நாடு

பொங்கல் பயணத்துக்கான ரயில்வே முன்பதிவு தொடக்கம் -ஒருசில நிமிடங்களில் இருக்கைகள் பதிவானதாக தகவல்.

பொங்கல் பயணத்துக்கான ரயில்வே முன்பதிவு தொடக்கம் -ஒருசில நிமிடங்களில் இருக்கைகள் பதிவானதாக தகவல்.

தந்தி டிவி

பொங்கல் ஜனவரி 14ஆம் தேதி போகியிலிருந்து 17ஆம் தேதி காணும் பொங்கல் வரை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 13ஆம் தேதியான திங்கட்கிழமையை தவிர்த்து பார்த்தால் ஜனவரி 11ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டதை அடுத்து, ஜனவரி 10 ஆம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு சரியாக இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. திருவனந்தபுரம், நெல்லை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கும் செல்லும் வைகை, பாண்டியன், நெல்லை, அனந்தபுரி உள்ளிட்ட அதி விரைவு ரயில்களில் பயணம் செய்வதற்கான பயண சீட்டுகள் ஒரு சில நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால், பயணிகள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காலை 6 மணிக்கு வந்து 7 வது ஆளாக வரிசையில் நின்றும் பயணச்சீட்டு கிடைக்கவில்லை என ஒரு பயணி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்