தை பொங்கலை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச அரிசி, கரும்பு, வேஷ்டி சேலை வழங்குவது போல் மண்பானையை இலவசமாக அரசு வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நசியனூரில் ஈரோடு மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள்
சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. கூட்டத்தில் களிமண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ளும் உத்தரவு, மண்பாண்ட நலன்களை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் ஒரு பாடப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.