தமிழ்நாடு

பொங்கல் பொருட்கள் - தவறு நடந்தால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு

பொங்கல் பண்டிகை பொருட்கள் வழங்குவதில் ஏதேனும் தவறு நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தந்தி டிவி

* வரும் 7 ஆம் தேதி முதல், பொங்கல் பண்டிகைக்கு முன்னால் அனைவருக்கும் விநியோகம் செய்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* பொங்கல் பரிசுத் தொகுப்புகள் மற்றும் ஆயிரம் ரூபாய் நிதி, கவர்களில் வைத்து கொடுக்காமல், வெளிப்படையாக கொடுக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, அதனை கண்காணிக்க உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

* சென்னை உள்ளிட்ட 10 மாநகராட்சிகளில், கூடுதல் பணியாளர்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எளிய முறையில் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்பதை விளக்கும் வகையில், உள்ளூர் நாளிதழ், தொலைக்காட்சிகளில் மாவட்ட ஆட்சியர்கள் விளம்பரப்படுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

* ரேஷன் கடைக்கு வந்த குடும்ப அட்டைதாரர்கள் யாரும் பொங்கல் பரிசு தொகுப்பை பெறாமல் செல்ல கூடாது என குறிப்பிட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு