தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரருக்கு ரூ.1,000 : முதலமைச்சருக்கு அமைச்சர்கள் நன்றி

பொங்கல் பண்டிகையை கொண்டாட 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு அமைச்சர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

தந்தி டிவி
பொங்கல் பண்டிகையை கொண்டாட 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு அமைச்சர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். சட்டப்பேரவையில் இன்று சட்டமன்ற உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட, அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது , அரசின் இந்த அறிவிப்பு சரித்திர சாதனை என கூறினார். இதே போல் அமைச்சர் தங்கமணி பேசும் போது, ஒரு சாமானியனின் ஆட்சி நடைப்பெற்று கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்த அறிவிப்பு உள்ளதாகவும், அதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்