தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை - இளவட்டக்கல் தூக்கும் போட்டி

பொங்கல் பண்டிகை - இளவட்டக்கல் தூக்கும் போட்டி

தந்தி டிவி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதன்ஒரு பகுதியாக நடந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டியை ராதாபுரம் எம்.எல்.ஏ., இன்பதுரை தொடங்கி வைத்தார். இதில் 70 கிலோ, 97 கிலோ மற்றும் 114 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லை தூக்கி இளைஞர்கள் அசத்தினர். இதில், 114 கிலோ இளவட்ட கல்லை அதிகமுறை தூக்கிய தங்கராஜ் முதல் பரிசையும், செல்லப்பாண்டி இரண்டாம் பரிசையும் பெற்றனர். இதேபோல் பெண்கள், ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 45 கிலோ உரலை தூக்கி அசத்தினர். இதில் மகாலட்சுமி, என்ற பெண் அதிக முறை உரலை தூக்கி சாதனை படைத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்