உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து, வீட்டின் முன் வண்ண கோலமிட்டு புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு வருகின்றனர். பொங்கல் பொங்கும் போது குலவையிட்டு ''பொங்கலோ பொங்கல்'' என்று உற்சாக குரல் எழுப்புகின்றனர்.
புகழ்பெற்ற கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.