தமிழ்நாடு

தெருவில் சண்டையிட்ட பெற்றோர் - அவமானமாக கருதி மகன் தற்கொலை

தந்தி டிவி

புதுச்சேரி, முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஜான்பால் நகரை சேர்ந்தவர் வினோத். இட்லி கடை நடத்தி வரும் இவருக்கு 4-பிள்ளைகள் இருந்தனர். இதில் மூத்த மகன் சஞ்சய் 9-ம் வகுப்பு முடித்துவிட்டு ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில், பெற்றோர் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால், அதனை அவமானமாக கருதி சஞ்சய் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், கடிதம் எழுதி வைத்து விட்டு சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடிதத்தில், பெற்றோர் இருவரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தெருவில் மோதி வந்ததும், இதனை அக்கம்பக்கத்தினர் வேடிக்கை பார்ப்பதும் தன்னை மன வேதனைக்கு உள்ளாக்கியதாக தெரிவித்திருக்கிறார். மேலும், இனிமேலாவது சண்டையிடாமல் இருங்கள் என கடிதத்தில் குறிப்பிட்டு விட்டு இளைஞர் தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு