சென்னை - புதுச்சேரி இடையே நீர்வழி போக்குவரத்து துவங்கவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளதை வரவேற்பதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்னை- கன்னியாகுமரிக்கு இடையேயும் நீர்வழி போக்குவரத்து திட்டம் தயாராக உள்ளதாகவும், கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தை விரைந்து முடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இத்திட்டங்கள் தமிழகத்திற்கு வளர்ச்சியை அளிக்க கூடிய திட்டங்கள் என்று கூறிய பொன். ராதாகிருஷ்ணன், சென்னை-கன்னியாகுமரிக்கு இடையே கிழக்கு கடற்கரை ரயில்வே பாதை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.