ஆட்சியாளர்கள் இந்து கோயிலுக்குள் வருவதில்லை, ஆனால் இந்து கோயில்களின் சொத்துக்களை ஆள நினைப்பது தவறு என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கூறினார். சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு வருகை தந்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தெய்வத் திருமேனிகளை சட்டைநாதர் கோவிலில்தான் வைக்க வேண்டும் என்றும், அவற்றை அரசு கையகப்படுத்தக் கூடாது என்றும் கூறினார்.