தமிழ்நாடு

விஸ்வரூபம் எடுக்கும் பொன்.மாணிக்கவேல் விவகாரம் : சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் என்ன நடக்கிறது?

பொன் மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி என யார் சொன்னது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் எழுப்பிய கேள்வி பெரும் புயலை கிளப்பியுள்ளது.

தந்தி டிவி

தஞ்சை ராஜராஜ சோழன், உலகமாதேவி உள்ளிட்ட கடத்தப்பட்ட பல சிலைகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு குழு மீட்டது. பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில், சிலை தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை நியமித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்த சூழலில் FIR போடும் விவகாரத்தில் பொன்.மாணிக்கவேல் வற்புறுத்தவதாக சிலை கடத்தல் தடுப்பு குழுவில் பணியாற்றும் போலீசார் பகீர் புகாரை வெளியிட்டனர்.

தன் மீதான புகாருக்கு தனது அதிரடியான பாணில் பளீச் என பதிலளித்தார், பொன்.மாணிக்கவேல்…. நிலைமை இப்படி இருக்க அமைச்சர் சி.சண்முகம் பொன்.மாணிக்கவேல் மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பொன்.மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி என யார் சொன்னது என்ற பரபரப்பை கேள்வியையும் அவர் எழுப்பினார்.

அமைச்சர் சிவி சண்முகத்தின் குற்றச்சாட்டால் பொன் மாணிக்கவேல் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி