தமிழ்நாடு

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - மூவரின் ஜாமீன் மறுப்பு

பொள்ளாச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பலைச் சேர்ந்த மூவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
தம்மை மிரட்டி, பலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட பொள்ளாச்சியை சேர்ந்த 16 வயது சிறுமி வாக்குமூலம் அளித்தார். இதில், கைதான 10க்கும் மேற்பட்டவர்களில், அருண் உள்ளிட்ட மூவர், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் கொடுமை செய்தவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், விசாரணை பாதிக்கும் என வாதிடப்பட்டது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறப்பட்ட வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்