தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டாஸ் ரத்து

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை, குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்துசெய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, கோவை மாவட்ட ஆட்சியர், கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருநாவுக்கரசுவின் தாயார் பரிமளா, சபரிராஜனின் தாயார் லதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி, இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து, கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்தனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்