தமிழ்நாடு

பொள்ளாச்சி பயங்கரம் - அதிர வைக்கும் தகவல்கள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தோண்ட, தோண்ட அதிர வைக்கும் பல தகவல்கள் வெளியாகின்றன.

தந்தி டிவி

2 படுக்கை அறைகள் கொண்ட இந்த பண்ணை வீடு, பொள்ளாச்சியில் அருகே சின்னப்பம்பாளையம் என்ற கிராமத்தில் உள்ளது.

பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுக்கு சொந்தமானது, இந்த பண்ணை வீடு. ஒரு அடிதடி பிரச்சினை காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வீட்டை காலி செய்துவிட்டு பொள்ளாச்சி நகருக்கு குடியேறிவிட்டது, திருநாவுக்கரசு குடும்பம். அதுவே திருநாவுக்கரசுக்கு வசதியாக போய்விட்டதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளம் மூலம் வலைவிரித்து, இளம்பெண்களை இங்கே வரவழைத்து கொடூர கும்பல் சீரழித்ததாக கூறப்படுகிறது. இங்கே வரும், இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இவை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்ய சுவற்றில் தனியாக துளையிடப்பட்டுள்ளது.

அந்த துளையின் மூலம் வீடியோ எடுத்து அதன் மூலம் இளம்பெண்களை மிரட்டியிருக்கிறார்கள். சமூக வலைதளம் மட்டுமின்றி, காதலியுடன் தனியாக இருக்க இடம் கேட்கும் நண்பர்களுக்கும், தன் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள், அதை பயன்படுத்திக்கொள் என திருநாவுக்கரசு தாராள மனசு காட்டுவாராம்.அப்படி காதலியுடன் வரும் நண்பனின் அந்தரங்கத்தை வீடியோவாக எடுத்து, அவர்களை அடித்து உதைத்து தங்கள் வழிக்கு கொண்டு வரும் செயலிலும் திருநாவுக்கரசு கும்பல் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த வீடு மட்டுமில்லாமல், சொகுசு கார்களிலும் இளம்பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாக இந்த கும்பல் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி எடுக்கப்படும் வீடியோக்களை வைத்து அந்த பெண்களை மிரட்டி, பணம் பறிப்பார்கள் என சொல்லப்படுகிறது.பணம் கொடுக்க முடியவில்லை என்றால் அவர்களை தங்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டல் விடுப்பார்கள் என கூறப்படுகிறது.

இப்படி பல இளம்பெண்கள் மட்டுமின்றி திருமணமான பெண்களையும் இந்த கும்பல் சீரழித்துள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி யிருக்கின்றன. 100வது சம்பவம், 200வது சம்பவம் என பாலியல் வன்முறையை இந்த கும்பல் கேக் வெட்டி கொண்டாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. வீடியோவை வைத்து மிரட்டி பெண்களை பலருக்கு விருந்தாக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஒருமுறை வந்தால், வீடியோ அழிக்கப்படும், நீ வராவிட்டால் உன் தோழியின் செல்போன் எண் கொடு, நகை கொடு, பணம் கொடு என பெண்களை மிரட்டி, மிரட்டி இவர்கள் பணிய வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய இவர்கள், அந்த வீடியோக்கள் மூலமே தற்போது சிக்கியிருக்கிறார்கள்.

பெண்களை சித்ரவதை செய்யும் வீடியோக்களில் 4 பேரும் இருப்பதே அவர்களுக்கு எதிரான ஆதாரமாக மாறியிருக்கிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை