தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நக்கீரன் கோபால் வழக்கு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறினார்.

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான நக்கீரன் கோபால், வழக்கு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறினார். பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இது தொடர்பான ஆதாரங்கள், ஆவணங்கள் இருப்பதாக கூறி நக்கீரன் இதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி ஆதாரங்கள் இருந்தால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று ஆஜரான அவர், சிபிசிஐடி விசாரித்த முறை சரியில்லை என்றும், ஆனால் சிபிஐ சரியான முறையில் விசாரிப்பதாகவும் தெரிவித்தார். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவர் என்றும் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்