தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தொடங்கியது

சென்னையில் மட்டும் 1600 முகாம் மூலம் 6 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்த நடவடிக்கை

தந்தி டிவி

கொரோனா தாக்கத்திற்கு பிறகு புலம்பெயரும் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து

முகாம்

தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து செலுத்தப்படுகிறது

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது

தமிழகம் முழுவதும் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்த இலக்கு

சென்னையில் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் துவக்கம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வாயில்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு புலம்பெயரும் குழந்தைகளை கண்டறிந்து போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டு வருகிறது . 43 ஆயிரம் முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து இன்று செலுத்தப்படுகிறது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் தமிழகம் முழுவதும் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

சென்னையில் மட்டும் 1600 முகாம் மூலம் 6 லட்சம் குழந்தைகளுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கும் சொட்டு மருந்து அளிக்கும் விதமாக சென்னையில் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூட கூடிய பகுதிகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன..

அந்த வகையில் தென்னக ரயில்வே உதவியுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வாயில்களில் முகாம் அமைக்கப்பட்டு வரக்கூடிய 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்