தமிழ்நாடு

போலீஸ் கமிஷனரை முற்றுகையிட்ட காவலர் குடும்பத்தினர்!- கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு

தந்தி டிவி

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உணவுப்படியை வழங்கக்கோரி, ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் காவலர்களின் குடும்பத்தினர், ஆவடி காவல் ஆணையரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாயல் எஸ்.எம் நகரில் உள்ள தமிழ்நாடு காவலர் கன்வென்ஷன் மகாலில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் காவலர்களின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து இந்த முகாமில் பங்கேற்று, வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உணவுப் படியை வழங்குமாறு ஆவடி காவல் ஆணையர் சங்கரை முற்றுகையிட்டனர். அப்போது, ஆவடி காவல் ஆணையரகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உணவுப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அரசாணை வெளிவந்துள்ளதால், ஓரிரு நாட்களில் நிறுத்தி வைக்கபட்டுள்ள உணவுப்படி வழங்கப்படும் எனக்கூறி, ஆவடி காவல் ஆணையர் சங்கர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?