தமிழ்நாடு

கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்..! தடுத்து நிறுத்திய காவலர்கள்.. சாலை மறியலில் குதித்த மக்கள்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் படையெடுத்த நிலையில், போலீசார் தடுத்து நிறுத்தினர். வரும் 16ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு, வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை இக்கோயிலில் தங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், இன்றுமுதலே பக்தர்கள் வாகனங்களில், அடுப்பு, பாத்திரம் மற்றும் உடைமைகளுடன் கோயிலுக்கு வருகை தருகின்றனர். போலீசார் இதற்கு அனுமதி மறுத்ததால், சாலை மறியலில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம் இருந்த ஒருவரை போலீசார் அழைத்துச் சென்றனர். இதனால் பாபநாசத்திலேயே தங்கஉடைமைகளை வைத்துக்கொண்டு சாலையோரமாக தங்கியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்