தமிழ்நாடு

சிறைக் காவலர் ஓட ஓட விரட்டி படுகொலை - கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு

செங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் பாலூரை அடுத்த பழைய சீவரம் பகுதியை சேர்ந்தவர் இன்பரசன். 29 வயதான இவர், புழல் சிறையில் சிறைக்காவலராக பணியாற்றி வந்தார். இன்று காலை இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வரவே, உடனடியாக அவர் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு பழைய சீவரம் புத்துக்கோயில் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அவரை வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல், இன்பரசனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இவரின் சடலத்தை மீட்ட போலீசார், விசாரணை நடத்தியதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளின் என்பவரின் மகன் ராஜனுக்கும் இன்பரசனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கொலை நடந்ததா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா