வீர தீர செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டி.ஜி.பி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவலர்களின் உயிர்தியாகத்தை போற்றும் வகையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.