தமிழ்நாடு

"திருவண்ணாமலை கோயிலில் மாயமான சிலை, சூலம்" - தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை கோயிலில் மாயமான சிலையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெண்கலம், பஞ்சலோகம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட 164 சிலைகள் உள்ளன. கடந்த 1982 ஆம் ஆண்டு கடைசியாக கணக்கெடுப்பு நடைபெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆரணி பகுதியை சேர்ந்த ஒரு பக்தர் கடந்த 1959ம் ஆண்டு கோயிலுக்கு காணிக்கையாக அளித்த ஒன்றே முக்கால் அடி உயரமுள்ள தண்டாயுதபாணி சாமி சிலை மற்றும் முக்கால்

அடி உயர சூலம் உள்ளிட்டவற்றை காணவில்லை என புகார் எழுந்தது.

இது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் அந்த சிலைகள் குறித்து தெரிய வரும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்