தமிழ்நாடு

மனைவியுடன் தகாத உறவு : தட்டிக்கேட்ட கணவரை வீட்டில் சிறைவைத்த காவல் உதவி ஆய்வாளர்

மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதை கேட்ட கணவரை அடித்து வீட்டில் சிறைவைத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

தந்தி டிவி

சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மலைவாசனுக்கும், அவரின் மனைவி மணிமேகலைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தனது கணவர் குறித்து அவ்வப்போது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்ற மணிமேகலைக்கு அங்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கலைசெல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த மலைவாசன், இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து மலைவாசனை கடுமையாக தாக்கிய கலைச்செல்வன் அவரை அவரது வீட்டிலேயே சிறை வைத்துள்ளார்.

இதனையடுத்து ஜன்னல் வழியாக அவர் உதவி கோரியதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர்

காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் : வீட்டுச் சிறை வைத்த விவகாரத்தில் அதிரடி

இதனிடையே, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த அவர், தற்போது வீராணம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்