தமிழ்நாடு

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு :17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில், புதிய சட்டப் பிரிவின் கீழ்17 பேருக்கு எதிராக சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கடந்த ஜூலை மாதம் அயனாவரத்தில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில்17 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தார்.12 வயதுக்கும் குறைவான சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியிருந்தது.

கடந்த ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ள போக்சோ சட்டப் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 300 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிகையில் 17 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்