தமிழ்நாடு

மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை...

மதுரை மத்திய சிறையில் நூற்றுக்கும் மேற்பட் போலீசார் சுமார் 2 மணிநேரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மதுரை மத்திய சிறையில் கஞ்சா, செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை முதல் மத்திய சிறையில் சோதனையில் ஈடுபட்டனர். சிறை வளாகம், கைதிகள் அறை, சமையல் அறை, மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். இதேபோல் பெண்கள் தனி சிறையிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என சிறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்