தமிழ்நாடு

DMK | கைது செய்ய சுற்றிவளைக்கும் போலீஸ்.. திமுக முக்கிய புள்ளிக்கு `லுக்-அவுட்’

கைது செய்ய சுற்றிவளைக்கும் போலீஸ்.. திமுக முக்கிய புள்ளிக்கு `லுக்-அவுட்’

thanthitv

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு - திமுக நிர்வாகிக்கு லுக் அவுட் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கி தருவதாக கூறி 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக உள்ள முக்கிய நபரான திமுக நிர்வாகி முத்துக்குமாருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தில் இயங்கிய பதிவு செய்யப்படாத தனியார் பள்ளிகள் சங்கம் மூலம், சட்டப்பூர்வ அனுமதிகள் பெற்று தருவதாக கூறி தமிழகம் முழுவதும் 177 பள்ளிகளிடம் ரூ.17.36 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக நிர்வாகி அரசகுமார் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். ​வழக்கில் 244 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளின் 60-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொடர்ந்து ஆஜராகாமல் வெளிநாட்டிற்கு தப்ப முயலும் முக்கிய குற்றவாளியான முத்துக்குமாரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

#dmk #school #scamissue #thanthitv

#Breaking | DMK MK Stalin Video | CM விஜய் பேச்சுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலடி

CM Vijay | TVK Alliance | கூட்டணி பெயரை அறிவித்த CM விஜய் | மீட்டிங்கின் ஹைலைட்ஸ் காட்சி

Min.Aadhav | ``மதச்சார்பின்மையும் சமூகநீதியும் எங்க இருக்கோ அங்கதான்.." ட்விஸ்ட் வைத்த அமைச்சர் ஆதவ்

CM Vijay | Vaiko | "நம்பிக்கையோடும்.. உணர்வோடும்.." உறுதியாக பேசிய வைகோ

Congress TVK Alliance | "தமிழகம்,புதுச்சேரி இடைத்தேர்தலிலும்.."| முடிவுகளை சொன்ன மாணிக்கம் தாகூர்