தமிழ்நாடு

இ பாஸ் - எல்லைகளில் தீவிர வாகன சோதனை

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது..

தந்தி டிவி

தஞ்சை

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மாவட்ட எல்லையான அத்தி கடையில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், இ-பாஸ் இல்லை என்றால் பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

திருச்சி

இதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இ-பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பும் போலீசார், இ-பாஸ் இல்லாமல் வரக்கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இ-பாஸ் உள்ளதா, இ-பாஸ் உண்மையானதா என தீவிரமாக ஆராய்ந்த பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்திலும், பரமத்திவேலூர் அருகே உள்ள எல்லை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சரக்கு போக்குவரத்துகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இ- பாஸ் இல்லாமல் வரும் வாகன ஒட்டிகளை திருப்பி அனுப்பப்படுகின்றனர். விவசாய சார்ந்து வேலைக்கு செல்வோரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை