தமிழ்நாடு

சந்தன மரங்களை வெட்டும் மர்ம கும்பலை சினிமா பாணியில் துரத்திய போலீஸ்...

காட்டிற்குள் ஓடி மறைந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
கோவை சாய்பாபா காலனியில் சந்தன மரங்களை வெட்டிய கும்பலை போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்றனர். முருகன் மில்ஸ் பின் பகுதியில் உள்ள சந்தன மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக்கொண்டிருந்தனர். தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்ற போது, மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிசென்றது. இதனையடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கார் நிற்காமல் சென்றது. அந்த காரை ஜீப்பில் போலீசார் துரத்தி சென்ற நிலையில், தில்லை நகர் பகுதியில் நின்றிருந்த ஜீப் ஒன்றின் மீது கார் மோதி நின்றது. இதனையடுத்து காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 4 பேர் காட்டிற்குள் ஓடி மறைந்தனர். தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்