தமிழ்நாடு

வீட்டுக்கடன் வாங்கி தருவதாகக் கூறி 10 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மோசடிசெக் வைத்து பிடித்த போலீஸ்

தந்தி டிவி

வீட்டுக்கடன் வாங்கி தருவதாகக் கூறி 10 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மோசடி

செக் வைத்து பிடித்த போலீஸ்

மக்களே உஷார்..!

அரியலூரில் வீட்டுக் கடன் வாங்கி தருவதாகக் கூறி சுமார் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்...

அரியலூர் மாவட்டம், பட்டணங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல். இவர் அப்பகுதியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 12 பேரிடம் வீட்டுக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, மொத்தம் 10 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். பணத்தை பெற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததாகக் கூறப்படும் நிலையில், கடன் வாங்கித் தராததால் பணத்தை கொடுத்தவர்கள் போலீசாரிடம் புகாரளித்தனர். இதையறிந்த மணிவேல், கோவை, பாலக்காடு, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தப்பியோடி தலைமறைவானார். இந்நிலையில், அவரது செல்போன் சிக்னலைக் கொண்டு அவர் ஈரோட்டில் இருப்பதை கண்டறிந்த போலீசார், திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது மணிவேலை கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்