ஒசூர் அருகே டிக் டாக் செயலியில் காவல்துறையினரை விமர்சித்து வீடியோ பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளளது. தேன்கனிகோட்டையை சேர்ந்த ஜவஹர்லால், கடந்த 28ஆம் தேதி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். டிக்டாக் செயலி தடை செய்யப்படுவதற்கு முதல் நாள் வீடியோ பதிவிட்டு, ஜவஹர்லால் வழக்கில் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.