மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் போது பெண் காவலரை கேலி செய்ததாக கூறி, முதல்வரிடம் விருதுபெற்ற ஜல்லிக்கட்டு வீரரை காவலர்கள் கடுமையாக தாக்கினர். மாடுபிடி வீரர் முடக்கத்தான் மணி என்பவர் பணியில் இருந்த பெண் காவலரை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சக காவலர்கள், மணியை கடுமையாக தாக்கினர். இதற்கு சக வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.