சென்னை அருகே ஒரு ஜோடி தந்தங்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து தந்தங்களையும் பறிமுதல் செய்தனர். பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்ததில் முன்னுக்கு முரணாக பதிலளித்துள்ளனர். அவர்களது செல்போன்களை ஆய்வு செய்த போது இரண்டு யானைத் தந்தத்தின் புகைப்படம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த போட்டோக்களை இடைத்தரகர் சின்ராஜ் அனுப்பியதாக கூறியுள்ளனர். இதையடுத்து சின்ராஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து இரண்டு தந்தங்களை பறிமுதல் செய்தனர்.