தமிழ்நாடு

புல்லட் நாகராஜன் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - வேலூர் மத்திய சிறையில் அடைப்பு

போலீசாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள ரவுடி புல்லட் நாகராஜன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

தந்தி டிவி

தேனி பெரியகுளத்தை அடுத்த மேல்மங்கலத்தைச் சேர்ந்த புல்லட் நாகராஜன் என்ற ரவுடி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு, வாட்ஸ்-அப் ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்திருந்தான். முடிந்தால் தன்னை கைது செய்து பாருங்கள் என போலீசாருக்கு சவாலும் விடுத்திருந்தான். இந்தநிலையில், நேற்று பெரியகுளம் தென்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார், புல்லட் நாகராஜனை அதிரடியாக கைது செய்தனர். அவனிடம் இருந்து கத்தி, 2 போலித்துப்பாக்கிகள், குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. பின்னர், மேல்மங்கலத்தில் உள்ள அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற போலீசார் அங்கும் தீவிர சோதனை நடத்தினர். பின்னர், புல்லட் நாகராஜன் மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பெரியகுளம் நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டான். அவர், புல்லட் நாகராஜனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, அவன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்