தமிழ்நாடு

பப்ஜி மதனை கைது செய்த போலீஸ்..ஆடி கார், ஐ போன் என சொகுசு வாழ்க்கை

சட்டவிரோத விளையாட்டு, ஆபாச பேச்சு என தொடர் சர்ச்சைகளில் சிக்கிய தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை போலீசார் தருமபுரியில் கைது செய்தனர்.

தந்தி டிவி

பப்ஜி மதனை கைது செய்த போலீஸ்..ஆடி கார், ஐ போன் என சொகுசு வாழ்க்கை

சட்டவிரோத விளையாட்டு, ஆபாச பேச்சு என தொடர் சர்ச்சைகளில் சிக்கிய தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை போலீசார் தருமபுரியில் கைது செய்தனர்.தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை இணையத்தில் சட்டவிரோதமாக விளையாடியது, சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கினார் சேலத்தை சேர்ந்த பப்ஜி மதன். இவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அதேநேரம் யூட்யூப் சேனலை நிர்வகித்து வந்த மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் மதிகோண் பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மதனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். யூட்யூப் சேனல் மூலமாக மாதத்திற்கு லட்சக்கணக்கில் வருமானம் வரவே அதை வைத்து ஆடி கார், ஐ போன் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக போலீசாரிடம் மதன் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை பப்ஜி விளையாட்டை விளையாண்டு வந்த மதன் இதுவரை 5 கோடிக்கும் மேல் பணம் சம்பாதித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இத்தனை நாட்களாக தன் அடையாளத்தை மறைத்து விளையாடி வந்த மதன், இப்போது போலீசாரிடம் வசமாக சிக்கியிருக்கிறார்....

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை