தமிழ்நாடு

Tambaram | புதருக்குள் ஒளிந்திருந்திருக்கும் நபர்.. காதல்ஜோடிகளை பயமுறுத்தியவரை தூக்கிய போலீசார்

thanthitv

Tambaram | புதருக்குள் ஒளிந்திருந்திருக்கும் நபர்.. காதல்ஜோடிகளை பயமுறுத்தியவரை தூக்கிய போலீசார் தாம்பரம் அருகே உள்ள பச்சைமலைப் பகுதியில், காதல் ஜோடிகள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை அச்சுறுத்தி வந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் பச்சைமலைப் பகுதிக்கு வரும் காதலர்கள் மற்றும் பெண்களை, குல்லா அணிந்த மர்ம நபர் ஒருவர் புதருக்குள் ஒளிந்திருந்து திடீரென வெளியே வந்து பயமுறுத்தியும், ஆபாச சைகைகள் காட்டியும் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து வந்த தொடர் புகார்களின் பேரில், குரோம்பேட்டை காவல்துறையினர் சாதாரண உடையில் மலைப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, துர்கா நகரைச் சேர்ந்த 26 வயதான சங்கர் என்பவர் இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மலைப்பகுதியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டும் பொதுமக்கள், இந்தப் பகுதியில் காவல்துறை ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்