தமிழ்நாடு

தப்பியோடிய 'போக்ஸோ' கைதி...அடுத்து அரங்கேற்றிய விபரீதம்..அதிர்ந்த போலீசார் - தேனியில் பரபரப்பு

தந்தி டிவி

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பள்ளி சிறுவர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி சித்ரவதை செய்த வழக்கில், கடந்த மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான விசாரணைக்கு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட விஜயகுமார், விசாரணை முடிந்து வெளியே வந்த போது திடீரென தப்பியோடி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்குள் பதுங்கி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த போலீசார், கேரள எல்லை பகுதியான போடி வனப்பகுதியில் வைத்து அவரை கைது செய்தனர். அப்போது, மலைப்பகுதிக்குள் ஏற்கனவே பறித்து வைத்திருந்த அரளிக்காய்களை இளைஞர் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரை தேன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sivakasi | Fire Accident | தமிழகத்தை கலங்கவைத்த சிவகாசி பட்டாசு விபத்து - ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

Tiruvannamalai | இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிக்கி அவதிப்பட்ட பெண்..

Villupuram | Fire |திடீரென குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ- NH சாலையை முழுவதுமாக மூடிய கரும்புகை

Tollgate Price | சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு இன்று முதல் அமல் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

JCD Prabhakar | ADMK MLA | ராஜினாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் பரபரப்பு நோட்டீஸ்