சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையானது பெரிய திரைகளில் போட்டுக் காண்பிக்கப்பட்டது. தேர்வு, எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான அவரது ஆலோசனையை மாணவர்கள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.