தமிழ்நாடு

பதாகைகள், கட்-அவுட் - பாமகவினர் என்றும் வைக்க கூடாது : பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தல்

கட்சி நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள், கட் அவுட் வைக்க கூடாது என்ற தனது உத்தரவை என்றும் கடைபிடிக்க வேண்டும் என்று கட்சியினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி
கட்சி நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள், கட் அவுட் வைக்க கூடாது என்ற தனது உத்தரவை என்றும் கடைபிடிக்க வேண்டும் என்று கட்சியினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், இந்த விதியை மீறுவது குறித்து கட்சியினர் நினைத்து கூட பார்க்க கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், தூத்துக்குடியில் தன்னை வரவேற்று வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றிய பிறகு தாம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும், வைத்தவர்களுக்கு அபராதமும் விதித்ததாக தெரிவித்துள்ளார். பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் என்றும் பதாகைகள் அமைத்தவர்களுக்கு அபராதம் விதித்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே இப்படி கூற உரிமை உண்டு என்றும் அதில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்