சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி பா.ம.க-வைச் சேர்ந்த 856 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புணி, தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறல், நோய் பரவும் வகையில் அஜாக்ரதையாக செயல்படுவது உள்ளிட்ட 3 பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.