தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய விவகாரம் : ராமதாஸூக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

காடுவெட்டி குரு மரணத்தின் போது அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட இழப்புகளை ராமதாஸிடம் பெறுவது குறித்த வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
கடந்த மே மாதம் பாமகவை சேர்ந்த காடுவெட்டி குரு மரணமடைந்ததை தொடர்ந்து அக்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் 73 அரசுப் பேருந்துகள் சேதமடைந்தன. இந்த இழப்புகளை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் இருந்து பெற உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’