சீன அதிபருடன் மாமல்லபுரத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்ததற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் வரவேற்பும், உபசரிப்பும் கலாச்சாரத்தையும் மரபையும் பிரதிபலித்ததாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் தமிழக மக்கள் மற்றும் சமூக அரசியல் அமைப்புக்களுக்கும் பிரதமர் மோடி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.