தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு : காவல்துறை வேண்டுகோள்

ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வருவோரை பாதுகாக்கும் வகையில் இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* வரும் 15-ம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், வீரர்களின் பாதுகாப்பிற்கும், விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உடனே உயர்தர முதலுதவியும், சகல வசதிகளுடன் கூடிய ரத்த வங்கியுடன் நடமாடும் மருத்துமனைகளும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பணியில் அமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

* காளைகளை பிடிக்க தெரிந்த மற்றும் முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க வேண்டும். பார்வையாளர்களை பாதுக்காக்கும் வகையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதுடன்,

* தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற பொதுமக்களும், மாடுபிடி வீரர்களும் மற்றும் மாட்டின் உரிமையாளர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறும், மதுரை மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு