பிளாஸ்டிக் கழிவுகளை உபயோக பொருளாக மாற்றி, மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை நெல்லை மகளிர் சுய உதவி குழு பெண்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை காசாக மாற்றும் முயற்சியை நெல்லை மாவட்ட மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் எடுத்து வருகின்றனர். இதற்காக, பெண் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், அரசின் முதலீடாக மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாளொன்றுக்கு சராசரியாக 100 முதல் 150 கிலோ வரை கழிவுகளை மறு சுழற்சி பொருளாக மாற்றுகின்றனர்.