தமிழ்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக மழைப்பொழிவு பதிவான இடங்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக மழைப்பொழிவு பதிவான இடங்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்

தந்தி டிவி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக மழைப்பொழிவு பதிவான இடங்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம். 7ம் தேதி காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை பெரம்பூரில் 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், மதுராந்தகம், திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் தலா 13 சென்டி மீட்டர் மழையும்,சென்னை தண்டையார்பேட்டையில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது,அம்பத்தூர், பூந்தமல்லி, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் தலா 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தாம்பரம், கோவை தெற்கு, புதுச்சேரி, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம், ஊத்துக்கோட்டை, சென்னை டிஜிபி அலுவலகம், செங்கம் பகுதிகளில் தலா 8 சென்டி மீட்டர் மழை,சென்னை எம்ஜிஆர் நகர், ஸ்ரீபெரும்புதூர், பொன்னேரி, திருக்கோவிலூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்