தமிழ்நாடு

போன் வெடித்த அதிர்ச்சியில் நிலைதடுமாறி மரணம்.. தமிழகத்தில் இதுவரை நடக்காத ஒரு விபரீதம்

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, செல்போன் வெடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடியை அடுத்த ஓட்டப் பாலத்தைச் சேர்ந்த ரஜினி என்பவர் தனது நண்பர் பாண்டியுடன் மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கமுதக்குடி அருகே வந்து கொண்டிருந்தபோது, அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது.

இதனால் அதிர்ச்சி அடைந்து இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ரஜினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடன் வந்த நண்பர் பாண்டி லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து பரமக்குடி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்